Homeசெய்திகள்சினிமாஆக்‌ஷன் காட்சிகளில் அசத்தும் தீபிகா படுகோன்... கர்ப்ப காலத்தில் ஆபத்தான முயற்சி...

ஆக்‌ஷன் காட்சிகளில் அசத்தும் தீபிகா படுகோன்… கர்ப்ப காலத்தில் ஆபத்தான முயற்சி…

-

தமிழில் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் சிங்கம். இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்களை வெளியிட்டனர். மூன்றிலுமே சூர்யா கதாநாயகனாக நடித்திருப்பார். அந்த வரிசையில் சிங்கம் படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. சூர்யா வேடத்தில் அஜய் தேவ்கன் நடித்திருப்பார். ரோஷித் ஷெட்டி இப்படத்தை இயக்கியிருந்தார். சிங்கம் படத்தை போலவே, இந்தியிலும் அத்திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.

இதைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் சிங்கம் ரிட்டன்ஸ் என்ற பெயரில் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது. ஆனால், சிங்கம் 2 படத்தை ரீமேக் செய்யாமல் புதிய கதையை வைத்து இப்படத்தை தயாரித்தனர். தற்போது மீண்டும் சிங்கம் அகெயன் என்ற பெயரில் இதன் மூன்றாம் பாகத்தை இயக்குகிறார் ரோஹித் ஷெட்டி. இப்படத்தில் அஜய் தேவ்கன் மட்டுமன்றி ரன்வீர் சிங், அக்‌ஷய் குமார் ஆகியோரும் படத்தில் நடிக்கின்றனர். மேலும், நடிகை தீபிகா படுகோனும் இதில் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார்.

போலீஸ் வேடத்தில் நடிகை தீபிகா ஆக்‌ஷன் காட்சிகளிலும், அதிரடி காட்சிகளிலும் நடித்து வருகிறாராம். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்நிலையில், கர்ப்பமாக இருக்கும் தீபிகா படுகோன் இதுபோன்ற ஆக்‌ஷன் காட்சிகளில் ஆபத்தான வகையில் நடிப்பது குறித்து நெட்டிசன்கள் கவலை அடைந்துள்ளனர்.

MUST READ