Homeசெய்திகள்சினிமாதாமதமாகும் 'வேள்பாரி'.... பிரபல நடிகரின் மகனை இயக்க திட்டம் போட்ட சங்கர்!

தாமதமாகும் ‘வேள்பாரி’…. பிரபல நடிகரின் மகனை இயக்க திட்டம் போட்ட சங்கர்!

-

- Advertisement -

நடிகர் சங்கர், பிரபல நடிகரின் மகனை இயக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.தாமதமாகும் 'வேள்பாரி'.... பிரபல நடிகரின் மகனை இயக்க திட்டம் போட்ட சங்கர்!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுபவர் சங்கர். இவர் ஜென்டில்மேன், முதல்வன், இந்தியன், அந்நியன், சிவாஜி என பல வெற்றி படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இருப்பினும் கடந்தாண்டு இவரது இயக்கத்தின் வெளியான இந்தியன் 2 திரைப்படமும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான கேம் சேஞ்சர் திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதன் பின்னர் இந்தியன் 3 படத்தில் கவனம் செலுத்த உள்ளார் சங்கர். அதைத் தொடர்ந்து இவர் வேள்பாரி படத்தை இயக்க இருப்பதாக பல பேட்டிகளில் தெரிவித்து இருந்தார் சங்கர். அதன்படி வேள்பாரி படம் தான் தன்னுடைய கனவு திட்டம் என்றும் இதனை மூன்று பாகங்களாக இயக்க இருப்பதாகவும் அப்டேட் கொடுத்திருந்தார். தாமதமாகும் 'வேள்பாரி'.... பிரபல நடிகரின் மகனை இயக்க திட்டம் போட்ட சங்கர்!இதன் பின்னர் சங்கர் பிரம்மாண்டமாக இயக்க இருக்கும் வேள்பாரி படத்தில் விக்ரம், சூர்யா ஆகியோர் நடிக்கப் போவதாகவும் தகவல் கசிந்தது. இந்நிலையில் இயக்குனர் சங்கர், இந்தியன் 3 படத்திற்குப் பிறகு பிரபல நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. அதாவது வேள்பாரி படம் தாமதமாகும் காரணத்தால் சங்கர் இந்த முடிவை எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ