Homeசெய்திகள்சினிமாநான்கு வருடம் ஆகுமா?....தாமதமாகும் 'விடுதலை 2'.... முடிவை மாற்றிய படக்குழு!

நான்கு வருடம் ஆகுமா?….தாமதமாகும் ‘விடுதலை 2’…. முடிவை மாற்றிய படக்குழு!

-

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களாக நடித்து ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் விடுதலை. மலைவாழ் மக்களுக்காக போராடும் வாத்தியாராக விஜய் சேதுபதியும், நேர்மையான கடைநிலை போலீசாக சூரியும் நடித்திருந்தனர். தாமதமாகும் விடுதலை 2....4 வருஷம் ஆகுமா?... ... முடிவை மாற்றிய படக்குழு!விடுதலை பாகம் 1 படத்தின் கிளைமாக்ஸ் கட்சியில் சூரி ,விஜய் சேதுபதியைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைப்பது போல முடிவடைந்து இருந்தது. விடுதலை 2 படத்தின் சில முன்னோட்ட காட்சிகளும் முதல் பாகத்தின் கிளைமாக்ஸ்-ல் இடம்பெற்று இருந்தன. இவை அனைத்துமே இரண்டாம் பாகத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தன. இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த விடுதலை 2 படப்பிடிப்புகள் முடிந்து 2024 ஆம் ஆண்டின் ஜனவரி 26 இல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு முடியாததால் படம் தள்ளிப் போகும் என்ற செய்திகள் வெளியாகி உள்ளன. இதற்கான காரணம் குறித்து வெற்றிமாறன் கூறுகையில், “விடுதலை 2 படத்தில் கிளைமாக்ஸ் காட்சி ஒரு அடர்பனி சூழ்ந்த களத்தில் நடப்பது போல திட்டமிட்டோம். இதற்காக கிட்டத்தட்ட நூறு நாட்களாக உண்மையிலேயே மூடு பனியில் படம் பிடித்தோம். தாமதமாகும் விடுதலை 2....4 வருஷம் ஆகுமா?... ... முடிவை மாற்றிய படக்குழு!அதன் பின் தான் உணர்ந்தோம், உண்மையான மூடுபனியில் இக்காட்சியை எடுத்து முடிக்க நாங்கள் 4 வருடங்களை செலவழிக்க வேண்டி இருக்கும். இதனால் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் பனியை உருவாக்க திட்டமிட்டோம். படத்தில் விஜய் சேதுபதி வரும் ஒரே ஒரு ஃப்ளாஷ் பேக் காட்சி மட்டுமே முடிக்க வேண்டியுள்ளது. மற்ற அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டன”என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

MUST READ