- Advertisement -
சந்தானம் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளன
சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து ஜொலித்துக் கொண்டிருக்கும் ஹீரோ சந்தானம். தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி இன்று ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சந்தானம். நகைச்சுவையில் இரட்டை அர்த்தங்களில் வசனம் பேசுவதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்த சமயத்தில், இனி அப்படிப்பட்ட நகைச்சுவை வேடங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறி இன்று வரை ஹீரோ வேடங்களை மட்டுமே ஏற்று நடித்து வருகிறார். அண்மையில் அவரது நடிப்பில் வெளியான டிடி ரிட்டர்ன், 80ஸ் பில்டப் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன
தற்போது சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் வடக்குப்பட்டி ராமசாமி. டிக்கிலோனா பட இயக்குநர் கார்த்திக் யோகி இத்திரைப்படத்தை இயக்கி உள்ளார். பீபிள் ஃபிலிம் பேக்டரி சார்பில் விஷ்வ பிரசாத் இத்திரைப்படத்தை தயாரித்து இருக்கிறார். இத்திரைப்படத்திற்கு ஜான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். இப்படத்தில் மேகா ஆகாஷ், நிழல்கள் ரவி, எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, ஜான் விஜய் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
https://youtu.be/sK-jFCYm6dIhttps://youtu.be/sK-jFCYm6dI