Homeசெய்திகள்சினிமாஇன்று சென்னையில் நடைபெறும் 'டிமான்ட்டி காலனி 2' படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

இன்று சென்னையில் நடைபெறும் ‘டிமான்ட்டி காலனி 2’ படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

-

- Advertisement -

டிமான்ட்டி காலனி 2 படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா இன்று சென்னையில் நடைபெற இருக்கிறது.இன்று சென்னையில் நடைபெறும் 'டிமான்ட்டி காலனி 2' படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

அருள்நிதி நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான டிமான்ட்டி காலனி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்த நிலையில் பல வருடங்கள் கழித்து தற்போது டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன், மீனாட்சி சௌந்தராஜன், விஜே அர்ச்சனா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரித்துள்ளது. சாம் சி எஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றது. அதைத்தொடர்ந்து படத்தின் டிரைலரும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகப்படுத்தியது. அடுத்ததாக இந்த படத்தின் ரிலீஸ் ட்ரெய்லும் அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்வு இன்று (ஆகஸ்ட் 10) மாலை 6.30 மணி அளவில் சென்னை வி ஆர் மாலில் நடைபெற இருப்பதாக படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

MUST READ