அருள்நிதி நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் டிமான்ட்டி காலனி. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். ஹாரர் திரில்லர் படமாக வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து எட்டு வருடங்கள் கழித்து அஜய் ஞானமுத்து டிமான்ட்டி காலனி இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார். இதில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், முத்துக்குமார், அருண்பாண்டியன், மீனாட்சி கோவிந்தராஜன், விஜே அர்ச்சனா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரித்துள்ளது இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டிருந்தனர். அதைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகப்படுத்தியது. ஆனால் படமானது ரிலீஸாகாமல் இன்னும் நிலுவையில் இருந்து வருகிறது. ரசிகர்களும் டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இதன் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி டிமான்ட்டி காலனி 2 படமானது 2024 ஆகஸ்ட் மாதத்தில் அதாவது அடுத்த மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள ஹாரர் திரில்லர் படமான சப்தம் திரைப்படமும் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாக இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.