Homeசெய்திகள்சினிமாரசிகர்களின் ஆதரவை பெறும் 'டிமான்ட்டி காலனி 2'.... விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த பிரியா பவானி சங்கர்!

ரசிகர்களின் ஆதரவை பெறும் ‘டிமான்ட்டி காலனி 2’…. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த பிரியா பவானி சங்கர்!

-

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் அருள்நிதி, சிறந்த கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர். அந்த வகையில் பல வெற்றி படங்களை தந்துள்ளார் அருள்நிதி. ரசிகர்களின் ஆதரவை பெறும் 'டிமான்ட்டி காலனி 2'.... விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த பிரியா பவானி சங்கர்!அந்த வகையில் கடந்த 2015ல் அருள்நிதி நடிப்பில் ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் வெளியான திரைப்படம் தான் டிமான்ட்டி காலனி. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்த நிலையில் படமானது வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து 9 வருடங்கள் கழித்து டிமான்ட்டி காலனி இரண்டாம் பாகம் வெளியாகி உள்ளது. நேற்று (ஆகஸ்ட் 15) சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியான இந்த படம் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது.ரசிகர்களின் ஆதரவை பெறும் 'டிமான்ட்டி காலனி 2'.... விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த பிரியா பவானி சங்கர்! படத்தின் முதல் பாகத்தில் ஹீரோ உள்பட அனைவருமே இறந்து விடுவார்கள் எனவே இரண்டாம் பாகம் எப்படி தொடங்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகின்றது. அதனை சரியான திரைக்கதையுடன் நகர்த்தியுள்ளார் அஜய் ஞானமுத்து. அருள்நிதி, பிரியா பவானி சங்கர் என அனைவருமே நேர்த்தியான நடிப்பை வழங்கி பாராட்டுகளை பெறுகின்றனர். அதிலும் குறிப்பாக ஷாம் சி.எஸ். – இன் இசை காட்சிக்கு காட்சி பார்வையாளர்களை மிரள வைக்கிறது. இவ்வாறு தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவை பெற்று வரும் டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் முதல் நாளில் மட்டுமே ரூ. 3 கோடி வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.ரசிகர்களின் ஆதரவை பெறும் 'டிமான்ட்டி காலனி 2'.... விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த பிரியா பவானி சங்கர்! இனிவரும் நாட்களிலும் படத்தின் வசூல் அதிகரித்து படமானது பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சமீபகாலமாக பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதால் அவர் ராசி இல்லாதவர் என பலரும் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து வந்தனர். அத்தகைய விமர்சனங்களுக்கு டிமான்ட்டி காலனி 2 படத்தின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார் ப்ரியா பவானி சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ