டிமான்ட்டி காலனி 2 படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
அருள்நிதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் வம்சம், மௌனகுரு, இரவுக்கு ஆயிரம் கண்கள், டைரி, கழுவேத்தி மூர்க்கன் என பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இதற்கிடையில் கடந்த 2015 ஆம் ஆண்டு அருள்நிதி, டிமான்ட்டி காலனி எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். ஹாரர் திரில்லர் கதை களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் கழித்து டிமான்ட்டி காலனி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது. அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இந்த படத்திற்கு டிமான்ட்டி காலனி 2 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் அருள்நிதி தவிர பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், விஜே அர்ச்சனா, மீனாட்சி கோவிந்தராஜன், முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பி டி ஜி யுனிவர்சல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ள நிலையில் ஹரிஷ் கண்ணன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். சாம் சி எஸ் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
Big announcement 📯#DemonteColony2 – Tamil Nadu Theatrical release rights bagged by the esteemed @RedGiantMovies_.
Massive updates loading soon!! Stay tuned!@BTGUniversal @arulnithitamil @bbobby @ManojBeno @priya_Bshankar @SamCSmusic @proyuvraaj @thinkmusicindia pic.twitter.com/U1pmTOeQLM
— Ajay R Gnanamuthu (@AjayGnanamuthu) July 22, 2024
அதைத்தொடர்ந்து மிரட்டலான ட்ரெய்லரும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகப்படுத்தியது. எனவே ரசிகர்கள் பலரும் படமானது எப்போது ரிலீஸ் ஆகும் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தினை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்யும் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகவும் ஆகஸ்ட் மாதத்தில் படம் வெளியாக இருப்பதாகவும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகளும் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளனர்.