அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த 2015-ல் அருள்நிதி நடித்து வெளியான திரைப்படம் டிமான்ட்டி காலனி. முழுக்க முழுக்க ஹாரர் திரில்லர் படமாக வெளியாகி இருந்த இந்த படத்தில் அருள்நிதியுடன் இணைந்து ரமேஷ் திலக், சனந்த், அபிஷேக் ஜோசப் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது
அதைத் தொடர்ந்து 7 வருடங்களுக்கு பிறகு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் டிமான்ட்டி காலனி இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. டிமான்ட்டி காலனி 2 VENGEANCE OF THE UNHOLY என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், VJ அர்ச்சனா, அருண் பாண்டியன் முத்துக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஞானமுத்து பட்டறை மற்றும் ஒயிட் நைட் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. சாம் சி எஸ் இதற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சில நாட்களுக்கு முன்பாக வெளியாகி கவனம் பெற்ற நிலையில் சமீபத்தில் இதன் டிரைலரும் தற்போது வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது மட்டுமில்லாமல் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ட்ரெய்லர் வீடியோ 8 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இந்த ட்ரெய்லரில் பயமுறுத்தும் காட்சிகள் நிறைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் சாம் சி எஸ் டிமான்ட்டி காலனி 2 படத்தை பார்த்து நாங்களே பயந்துவிட்டோம் என்று அப்டேட்டை கொடுத்ததனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் எக்கச்சக்கமாக எகிறி உள்ளது. எனவே இப்படம் எந்த அளவிற்கு ரசிகர்களுக்கு விருந்தை படைக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.