Homeசெய்திகள்சினிமாவிரைவில் உருவாகும் 'டிமான்ட்டி காலனி 3'.... லேட்டஸ்ட் அப்டேட்!

விரைவில் உருவாகும் ‘டிமான்ட்டி காலனி 3’…. லேட்டஸ்ட் அப்டேட்!

-

- Advertisement -

டிமான்ட்டி காலனி 3 திரைப்படம் விரைவில் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.விரைவில் உருவாகும் 'டிமான்ட்டி காலனி 3'.... லேட்டஸ்ட் அப்டேட்!

கடந்த 2015 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் டிமான்ட்டி காலனி திரைப்படம் வெளியானது. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்க இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து 8 வருடங்களுக்குப் பிறகு டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் திரைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. எனவே இந்த வெற்றிக்குப் பிறகு டிமான்ட்டி காலனி 3 திரைப்படத்தில் உருவாக்க படக்குழு திட்டமிட்டு வருகிறது. அதன்படி இந்த படத்தினை அஜய் ஞானமுத்து இயக்க பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனமும் கோல்ட் மைன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் என சொல்லப்படுகிறது.விரைவில் உருவாகும் 'டிமான்ட்டி காலனி 3'.... லேட்டஸ்ட் அப்டேட்! அடுத்தது இந்த படத்தின் படப்பிடிப்பு ஜப்பானில் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த படமானது 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் விரைவில் இந்த படம் தொடங்கப்படும் எனவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது. அதே சமயம் இந்த படத்தில் அருள்நிதி தவிர வேறு எந்த நடிகர்கள் நடிக்கப் போகிறார்கள் என்ற விவரங்களும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ