Homeசெய்திகள்சினிமாவசூல் வேட்டை நடத்தும் 'டிமான்ட்டி காலனி 2'.... தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடியா?

வசூல் வேட்டை நடத்தும் ‘டிமான்ட்டி காலனி 2’…. தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடியா?

-

அருள்நிதி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு டிமான்ட்டி காலனி 2 எனும் திரைப்படம் வெளியானது. வசூல் வேட்டை நடத்தும் 'டிமான்ட்டி காலனி 2'.... தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடியா?ஹாரர் திரில்லர் கதை களத்தில் உருவாகி இருந்த இந்தப் படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி இருந்தார். இதில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க இவர்களுடன் இணைந்து வி ஜே அர்ச்சனா, அருண்பாண்டியன், மீனாட்சி சௌந்தர்ராஜன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பி டி ஜி யுனிவர்சல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்த நிலையில் சாம் சி எஸ் இதற்கு இசை அமைத்திருந்தார். ஹரிஷ் கண்ணன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். ஏற்கனவே கடந்த 2015 இல் வெளியான டிமான்ட்டி காலனி திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால் டிமான்ட்டி காலனி 2 திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்து வந்தது. அதனை பூர்த்தி செய்யும் விதமாக படமும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி நடைபோடுகிறது.வசூல் வேட்டை நடத்தும் 'டிமான்ட்டி காலனி 2'.... தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடியா? அந்த வகையில் பல திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த படம் தமிழ்நாட்டில் மட்டுமே கிட்டத்தட்ட 25 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் உலக அளவில் 32 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என சொல்லப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழுவினர் சார்பில் விரைவில் வெளியிடப்படும் என்று நம்பப்படுகிறது.

MUST READ