Homeசெய்திகள்சினிமாபைரா... ஃப்ரம் தி வேர்ல்ட் ஆஃப் தேவரா....... சைஃப் அலிகான் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

பைரா… ஃப்ரம் தி வேர்ல்ட் ஆஃப் தேவரா……. சைஃப் அலிகான் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

-

ஜூனியர் என்டிஆர் நடிக்கும் ‘தேவரா‘ படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

ஆர் ஆர் ஆர் படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜூனியர் என்டிஆர் தேவரா என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கொரட்டலா சிவா இயக்குகிறார். இதனை நந்தமுரி தரகா ராமாராவ் ஆர்ட்ஸ் நிறுவனமும் யுவசுதா ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து ஜான்வி கபூர், சைஃப் அலிகான், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் சில மாதங்களுக்கு முன்பாக படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் சைஃப் அலிகானின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. இன்று 53வது பிறந்த நாளை கொண்டாடும் சைஃப் அலிகானிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக இந்த போஸ்டரை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் சைக்காலிக்கான் பைரா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரியவந்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ