Homeசெய்திகள்சினிமா'தேவரா' படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் வெளியீடு!

‘தேவரா’ படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் வெளியீடு!

-

தேவரா படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.'தேவரா' படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் வெளியீடு!

ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் தேவரா. இந்த படத்தினை கொரட்டலா சிவா இயக்கியிருக்கிறார். இந்த படத்தினை நந்தமுரி தரகா ராமராவ் ஆர்ட்ஸ் நிறுவனமும் யுவசுதா ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து படத்தினை தயாரித்துள்ளது. அனிருத் இதற்கு இசையமைத்திருக்கிறார். ரத்னவேலு இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். மிகவும் பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகி இருக்கும் தேவரா திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் -க்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்திருக்கிறார். மேலும் படத்தில் வில்லனாக சைஃப் அலிகான் நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகமானது வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது.

இதற்கிடையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் மிரட்டலான டிரைலர் வெளியாகி இருக்கிறது. இந்த ட்ரெய்லரில் ஆக்ஷன் காட்சிகள் காட்டப்படுகிறது. ஜூனியர் என்டிஆர் மாஸான லுக்கில் காண்பிக்கப்பட்டுள்ளார். இந்த ட்ரெய்லர் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருவதோடு படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தி உள்ளது.

MUST READ