Homeசெய்திகள்சினிமாஅஜித்தின் டான்ஸை பார்த்து திகைத்துப் போன தேவி ஸ்ரீ பிரசாத்!

அஜித்தின் டான்ஸை பார்த்து திகைத்துப் போன தேவி ஸ்ரீ பிரசாத்!

-

நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அஜித்தின் டான்ஸை பார்த்து திகைத்துப் போன தேவி ஸ்ரீ பிரசாத்!இதன் இறுதி கட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் படமானது தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் நடிகர் அஜித், மார்க் ஆண்டனி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி எனும் திரைப்படத்திலும் கமிட் ஆகியுள்ளார். அஜித் இந்த படத்தில் மூன்று வேடங்களில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் இதன் முதற்கட்ட படப்பிடிப்புகளும் நிறைவடைந்துள்ளது. விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் தொடர்ந்து இருக்கின்றன. இதற்கிடையில் படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அஜித்தின் டான்ஸை பார்த்து திகைத்துப் போன தேவி ஸ்ரீ பிரசாத்!அதேசமயம் இந்த படமானது 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, “குட் பேட் அக்லி படத்தில் பாடல் ஒன்றை படமாக்கி முடித்திருக்கிறோம். தல அஜித் அந்த பாடலுக்கு பயங்கரமாக டான்ஸ் ஆடி இருக்காரு. அவருடைய டான்ஸை பார்த்து நான் திகைத்துப் போனேன். அஜித்தின் மீதான அத்தனை ரசிகர்களின் அன்பையும் அந்த பாடலில் பார்க்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ