நடிகர் தனுஷ் பல படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் சினிமா கலையின் மீது தனக்குள்ள ஆர்வத்தால் சில படங்களை இயக்கியும் வருகிறார். அந்த வகையில் அவருடைய இயக்கத்தில் வெளியான முதல் படம் “ப.பாண்டி” வசூல் ரீதியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக தனுஷின் இயக்கத்தில் இரண்டாவது படமாக, அவரது ஐம்பதாவது படத்தை இயக்கி, நடித்தும் உள்ளார். இப்படத்தின் தலைப்பு ‘ராயன்’ என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். விரைவில் இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டாக வரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தைப் பற்றி எஸ்.ஜே.சூர்யா மெய் சிலிர்த்து எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றே இட்டுள்ளார்.
Avaru super director TOO …. @dhanushkraja-ku Direction mela Yenna veri yenna dedication 🥰🥰🥰 Avaru Vera level #D50 our content, different treatment , “raw&rustic” international out put 👍👍👍🥰sjs & all the best to NEEK TOO https://t.co/xvhoQPMgKF
— S J Suryah (@iam_SJSuryah) December 25, 2023
அவர் கூறியிருப்பதாவது “அவரு (தனுஷ்) சூப்பர் இயக்குனர் . டைரக்ஷன் மேல என்ன வெறி… என்ன அர்ப்பணிப்பு.. அவரு வேற லெவல். நாங்கள் பணியாற்றியுள்ள D50 திரைப்படம் உலகத் தரத்தில் உருவாகியுள்ளது.” என்று மெய் சிலிர்த்துப் பதிவிட்டுள்ளார். மேலும் தனுஷ் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படமான ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் (NEEK)’ படத்திற்காக அவருக்கு ஆல் தி பெஸ்ட் என்றும் பதிவிட்டுள்ளார். இப்படத்தின் அறிவிப்பு வீடியோ சமீபத்தில் வெளியாகி இளைஞர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. D50 ஒரு கேங்ஸ்டர் படமாக இருக்கும் என்றும் ஏற்கனவே தகவல்கள் வெளிவந்தன. தற்போது எஸ்.ஜே.சூர்யா இட்டுள்ள இந்த பதிவு படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் ஏற்றிவிட்டுள்ளது.