Homeசெய்திகள்சினிமாபரஸ்பர விவாகரத்து கோரி தனுஷ் - ஐஸ்வர்யா மனு தாக்கல்!

பரஸ்பர விவாகரத்து கோரி தனுஷ் – ஐஸ்வர்யா மனு தாக்கல்!

-

- Advertisement -

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். பரஸ்பர விவாகரத்து கோரி தனுஷ் - ஐஸ்வர்யா மனு தாக்கல்!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். இவர் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் பாடகராகவும் பாடல் ஆசிரியராகவும் வலம் வருகிறார். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை கடந்த 2004 , நவம்பர் மாதம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2022ல் திருமண உறவே முறித்துக் கொள்வதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினர். இவர்கள் இருவருக்கும் யாத்ரா, லிங்கா ஆகிய இரு மகன்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பரஸ்பர விவாகரத்து கோரி தனுஷ் - ஐஸ்வர்யா மனு தாக்கல்!இந்நிலையில் கடந்த சில வருடங்களாக தனித்தனியே வாழ்ந்து வரும் ஐஸ்வர்யா தனுஷ் இருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி சென்னையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருந்த 3 படத்தில் நடிகர் தனுஷ் நடித்திருந்தார். அதன் பின்னர் வை ராஜா வை திரைப்படத்திலும் தனுஷ், கேமியா ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ