Homeசெய்திகள்சினிமாதனுஷுடன் சூப்பராக நடனமாடிய சரண்யா பொன்வண்ணன்..... வைரலாகும் வீடியோ!

தனுஷுடன் சூப்பராக நடனமாடிய சரண்யா பொன்வண்ணன்….. வைரலாகும் வீடியோ!

-

- Advertisement -

நடிகர் தனுஷும், நடிகை சரண்யா பொன்வண்ணனும் நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.தனுஷுடன் சூப்பராக நடனமாடிய சரண்யா பொன்வண்ணன்..... வைரலாகும் வீடியோ!

நடிகர் தனுஷ் தற்போது ஏகப்பட்ட படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் குபேரா, இட்லி கடை, தேரே இஷ்க் மெய்ன் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா, லப்பர் பந்து பட இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து, அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி ஆகியோரின் இயக்கத்தில் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். தனுஷுடன் சூப்பராக நடனமாடிய சரண்யா பொன்வண்ணன்..... வைரலாகும் வீடியோ!இதற்கிடையில் இவரது இயக்கத்தில் உருவாகியிருந்த நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் நேற்று (பிப்ரவரி 21) திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் பவிஷ், அனிகா, மேத்யூ தாமஸ், பிரியா வாரியர், சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

எனவே இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தனுஷும், சரண்யா பொன்வண்ணனும் இணைந்து நடனமாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இதைக் கண்ட ரசிகர்கள் நடிகர் தனுஷ், சினிமாவில் ஆர்வத்துடன் ரசித்து பணியாற்றுகிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஏற்கனவே சரண்யா பொன்வண்ணன் வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களில் தனுஷுக்கு அம்மாவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ