தமிழ் சினிமாவில் திரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். அதைத் தொடர்ந்து இவர் பகீரா போன்ற படங்களை இயக்கியிருந்தாலும், மார்க் ஆண்டனி திரைப்படம் தான் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. எனவே அதைத்தொடர்ந்து ஆதிக் என்ன படம் இயக்கப் போகிறார்? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தை இயக்கப் போவதாக அறிவித்தார். அன்று முதலே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வந்தது. அதன்படி இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லரில் ஃபேன் பாயின் தரமான சம்பவத்தை காட்டி இருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன்.
எனவே இந்த படத்தை நாளை மறுநாள் (ஏப்ரல் 10) திரையரங்குகளில் பார்த்து, கொண்டாடி தீர்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். டிக்கெட் முன்பதிவுகளும் களைகட்டுவதோடு வசூலிலும் மாஸ் காட்டி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து OG சம்பவம் எனும் வெறித்தனமான பாடல் வெளியாகி தற்போது வரையிலும் இணையத்தை கலக்கி வருகிறது. இந்த பாடலை ஜி.வி. பிரகாஷ் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் இணைந்து பாடியிருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜி.வி. பிரகாஷ், ஆதிக் மற்றும் குட் பேட் அக்லி படம் குறித்து பேசி உள்ளார்.
“#Dhanush sir called & told me that #GoodBadUgly songs are superb👌. All the songs has been composed after shooting, matching the visuals🎶. I have delivered my best energy, from whatever extent i can do from that🤞🎹”
– GVPrakash pic.twitter.com/IBK0ZSFLgz— AmuthaBharathi (@CinemaWithAB) April 8, 2025
அதன்படி அவர், “என்னிடம் ஒவ்வொரு இயக்குனர்களும் ஒவ்வொரு பாடல்களையும் ஒவ்வொரு விதமான ஸ்டைலில் வாங்குவார்கள். அதேபோல் ஆதிக் ரவிச்சந்திரனிடமிருந்து ஹை எனர்ஜி கிடைக்கும். அது தனித்துவமானதாக இருக்கும். அதுதான் OG சம்பவம் பாடலின் பிளஸ். எல்லோரும் கால் பண்ணி அந்த பாடல் நல்லா இருக்கு என்று சொல்றாங்க. தனுஷ் சாரும் எனக்கு கால் பண்ணி பாடல் சூப்பரா இருக்குன்னு சொன்னார்” என்று தெரிவித்துள்ளார்.