கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. நெல்சனுக்கும், ரஜினிக்கும் இந்தப் படம் தரமான கம்பேக்காக அமைந்தது. எனவே இயக்குனர் நெல்சன், அடுத்தது ஜெயிலர் 2 திரைப்படத்தை இயக்க திட்டமிட்டு வருகிறார். இந்த படத்திற்காக அவர் ஏற்கனவே சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து அட்வான்ஸ் பெற்றுக் கொண்டதாகவும் படத்தின் முதற்கட்ட வேலைகள் நடைபெற்று வருவதாகவும் தொடர்ந்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சமீப காலமாக இந்த படத்தில் நடிகர் தனுஷ், ரஜினியுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என்று சொல்லப்பட்டு வருகிறது. நடிகர் தனுஷ், ஏற்கனவே ரஜினிகாந்தின் மிகத் தீவிர ரசிகன் என்பதால் காலா திரைப்படத்திலேயே ரஜினியுடன் இணைந்து நடிக்க விருப்பப்பட்டார் தனுஷ். ஆனால் ஒரு சில காரணங்களால் ரஜினி அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். எனவே ஜெயிலர் 2 திரைப்படத்தில் தனுஷை நடிக்க வைக்க ரஜினி ஒப்புக்கொள்வாரா? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் ரஜினியுடன் இணைந்து தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் யாரேனும் நடித்தால் அந்த வெற்றியானது இருவருக்குமே பொதுவானதாகிவிடும். ஆகையினால் மற்ற மொழி நடிகர்களை நடிக்க வைத்தால் எந்தவித பிரச்சனையும் வராது என்பதால் தான் ரஜினியின் ஜெயிலர், கூலி போன்ற படங்களில் மற்ற மொழி நடிகர்கள் கேமியோ ரோல்களில் நடித்து வருகின்றனர். ஆகையினால் ஜெயிலர் 2 திரைப்படத்திலும் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் தனுஷ் நடிக்க வாய்ப்பில்லை எனவும் இந்த தகவல் முற்றிலும் வதந்தி எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ரஜினிக்கும் தனுஷுக்கும் தனிப்பட்ட முறையில் கருத்து வேறுபாடு இருப்பதனால் இது சாத்தியமாகாது என்றும் கூறி வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் ஜெயிலர் 2 படத்தின் ஆரம்பகட்ட பணிகள் மட்டுமே நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தின் நடிகர், நடிகைகளை தேர்ந்தெடுக்கும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை எனவும் புதிய தகவல்கள் தெரிவிக்கிறது.