Homeசெய்திகள்சினிமாலப்பர் பந்து பட இயக்குனரின் அடுத்த படத்தில் தனுஷ்..... ஷூட்டிங் எப்போது?

லப்பர் பந்து பட இயக்குனரின் அடுத்த படத்தில் தனுஷ்….. ஷூட்டிங் எப்போது?

-

- Advertisement -

லப்பர் பந்து பட இயக்குனரின் அடுத்த படத்தின் ஷூட்டிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.லப்பர் பந்து பட இயக்குனரின் அடுத்த படத்தில் தனுஷ்..... ஷூட்டிங் எப்போது?

நடிகர் தனுஷ், ராயன் படத்திற்கு பிறகு குபேரா, இட்லி கடை ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையிலே இளையராஜாவின் பயோபிக், தேரே இஷ்க் மெய்ன் ஆகிய அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் அமரன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 55 ஆவது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. இந்நிலையில் தான் சமீபகாலமாக நடிகர் தனுஷ், லப்பர் பந்து படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாக சொல்லப்படுகிறது.லப்பர் பந்து பட இயக்குனரின் அடுத்த படத்தில் தனுஷ்..... ஷூட்டிங் எப்போது?

அதாவது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் லப்பர் பந்து திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சுவாசிகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் நடித்திருந்தனர். கிரிக்கெட் சம்பந்தமான கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளையும் பெற்றது. எனவே தமிழரசன் பச்சமுத்து அடுத்ததாக என்ன படம் இயக்கப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் இருந்து வருகிறது. லப்பர் பந்து பட இயக்குனரின் அடுத்த படத்தில் தனுஷ்..... ஷூட்டிங் எப்போது?அதன்படி தமிழரசன் பச்சமுத்து, நடிகர் தனுஷிடம் கதை ஒன்றை சொல்லியிருப்பதாகவும் அந்த கதையை கேட்ட தனுஷ் மிரண்டு விட்டதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இவர்களது கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு 2025 ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் எனவும் இப்படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது எனவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ