தனுஷ் நடிக்கும் குபேரா படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் படத்திற்குப் பிறகு தனது 50வது படமான ராயன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் வெளியாக இருக்கிறது. ராயன் படத்தை இயக்கிய பின்னர் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் எனும் திரைப்படத்தையும் இயக்கி வருகிறார் தனுஷ். அதேசமயம்
நடிகர் தனுஷ், குபேரா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சேகர் கம்முலா இயக்குகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசை அமைக்கிறார். இதில் தனுஷ் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் திருப்பதி, மும்பை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி குபேரா படமானது இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று சமூக வலைதளங்களில் பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்த பின்னரே படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று நம்பப்படுகிறது.