Homeசெய்திகள்சினிமாகில்லர்.. கில்லர்.. கேப்டன் மில்லர்.....வெறித்தனமான டீசர் வெளியானது!

கில்லர்.. கில்லர்.. கேப்டன் மில்லர்…..வெறித்தனமான டீசர் வெளியானது!

-

தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகியுள்ளது. ராக்கி, சாணிக்காயிதம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்கியுள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது. ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். தனுஷின் கேரியரில் மிக முக்கியமான படமாக கருதப்படும் இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து பிரியங்கா மோகன், சந்திப் கிஷன், ஜான் கொக்கேன், நிவேதிதா சதீஷ், சிவராஜ் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும் சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அதனால் கேப்டன் மில்லர் படத்தின் அப்டேட்டுகளை ரசிகர்கள் அனைவரும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தற்போது மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கேப்டன் மில்லர் படத்தின் டீசர் தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி உள்ளது. இந்த மிரட்டலான டீசர் 1 நிமிடம் 33 நிமிடங்கள் நீண்டுள்ளது.

இதுவரை வெளிவந்த தனுஷ் படங்களின் டீசரிலேயே ஒரு வெறித்தனமான டீசராக இது அமைந்துள்ளது. ஒரு வின்டேஜ் லுக்கில் தாடியுடன் காட்டுத்தனமான தனுசை அறிமுகம் செய்கிறார்கள். பின்னர் படத்தில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்களான பிரியங்கா அருள் மோகன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், ஜான் கொக்கேன், மற்றும் எதிரணியினராக வரும் ஆங்கிலப்படைகளையும் காட்டுகின்றனர். டீசர் முழுவதுமே தனுஷின் தலைமையிலான படைகள் மற்றும் ஆங்கில படைகளுடன் மோதும் படியான காட்சிகள் அதிகளவில் இடம் பெற்றுள்ளன. படத்தின் பெரும்பாலான காட்சிகள் போர் காட்சிகளாகவே அமையும் என்பதை டீசரிலேயே தெளிவுபடுத்தி உள்ளனர். ஒரு பெரும்படையையே கையில் ஒரே ஒரு கோடரி வைத்துக் கொண்டு தனுஷ் எதிர்த்து சண்டையிடுவது போன்ற ஒரு சண்டைக் காட்சி இதில் இடம் பெற்றுள்ளது. நிச்சயமாக தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடும் ஒரு சண்டைக்காட்சியாக இது அமையும். எதிர்த்து வரும் ஆங்கிலப்படைகளை கையில் வைத்திருக்கும் துப்பாக்கியின் தோட்டாக்களால் வரவேற்க தயாராகும் தனுஷின் அதிரடியான ஸ்கிரீன் பிரசென்ஸ் அல்டிமேட்.

படமானது மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்டு இருப்பதையும் விஷுவல் ஆகவே காண்பித்துள்ளனர். இயக்குனரின் முந்தைய படங்கள் போலவே இந்த படத்திலும் வன்முறை வன்முறை காட்சிகள் சற்று தூக்கலாகவே இருக்கும் போல. இருப்பினும் படத்தின் கதை என்ன என்பதை கணிக்க முடியாத வகையில் டீசர் மிக நேர்த்தியாக வெளியிடப்பட்டுள்ளது. நிச்சயமாக தனுஷ் ரசிகர்களுக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் கேப்டன் மில்லர் ஒரு மிகப்பெரிய விருந்தாக அமையும் என்பதை டீசரிலேயே நிரூபித்து விட்டனர் படக் குழுவினர்.

மேலும் கேப்டன் மில்லர் திரைப்படம் வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ