இட்லி கடை படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நடிகர் தனுஷ் கடந்த 2017 ஆம் ஆண்டு பவர் பாண்டி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் இயக்கிய முதல் படமே இவருக்கு பெயரையும் புகழையும் பெற்று தந்தது. அதைத் தொடர்ந்து இவர் ராயன் எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் அடுத்ததாக இட்லி கடை எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார் தனுஷ். இந்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க அருண் விஜய் வில்லனாக நடித்து வருகிறார். மேலும் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, ராஜ்கிரண், சத்யராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். டான் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கிரண் கௌஷிக் இதன் ஒளிப்பதிவு பணிகளையும் மேற்கொள்கிறார். தனுஷின் 52 வது படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் தேனி பகுதியில் தொடங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பொள்ளாச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதத்திற்குள் முடிவடைந்து விடும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை (நவம்பர் 8) காலை 11 மணியளவில் வெளியாகும் என படக் குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டரில் பேருந்து ஒன்று காண்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பேருந்தில் சங்கராபுரம் என்று எழுதப்பட்டுள்ளது. எனவே ரசிகர்கள் பலரும் இந்த அப்டேட் என்ன அப்டேட்டாக இருக்கும் என ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.