Homeசெய்திகள்சினிமாதனுஷ் நடிக்கும் 'ராயன்'..... நாளை நடைபெறும் இசை வெளியீட்டு விழா.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தனுஷ் நடிக்கும் ‘ராயன்’….. நாளை நடைபெறும் இசை வெளியீட்டு விழா…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

-

நடிகர் தனுஷ் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் குபேரா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் தனது 50 வது படமான ராயன் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து முடித்துள்ளார். தனுஷ் நடிக்கும் 'ராயன்'... நாளை நடைபெறும் இசை வெளியீட்டு விழா.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!இதில் தனுஷ் உடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், சரவணன், பிரகாஷ்ராஜ், செல்வராகவன், வரலட்சுமி சரத்குமார், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஏ ஆர் ரகுமானின் இசையிலும் இந்த படம் உருவாகியுள்ளது. மாஸான கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள இந்த படம் வருகின்ற ஜூலை 26 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களும்
அதை தொடர்ந்து அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

இந்நிலையில் ஏற்கனவே வெளியான தகவலின்படி, இந்த படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நாளை (ஜூலை 6ஆம் தேதி) நடைபெற இருப்பதாக படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் ராயன் ரம்பிள் எனும் புதிய பாடல் இன்று மாலை 6 மணி அளவில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளனர்.

MUST READ