Homeசெய்திகள்சினிமாதனுஷ் நடிப்பில் உருவாகும் 'ராயன்' ....ட்ரைலர் குறித்த அறிவிப்பு!

தனுஷ் நடிப்பில் உருவாகும் ‘ராயன்’ ….ட்ரைலர் குறித்த அறிவிப்பு!

-

தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ராயன் திரைப்படத்தின் டிரைலர் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.தனுஷ் நடிப்பில் உருவாகும் 'ராயன்' ....ட்ரைலர் குறித்த அறிவிப்பு!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் நிலையில் தொடர்ந்து பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். ஓய்வே இல்லாமல் அடுத்தடுத்த படப்பிடிப்புகளில் கலந்துகொண்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார். மேலும் தனுஷ் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் உருவெடுத்து இருக்கிறார். அதாவது கடந்த 2017 ஆம் ஆண்டு ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா ஆகியோரின் நடிப்பில் ப. பாண்டி எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து சிறிய இடைவெளிக்கு பின்னர் தனது 50ஆவது திரைப்படத்தை தானே இயக்கி நடித்துள்ளார் தனுஷ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ராயன் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைத்திருக்கிறார். இந்த படம் வருகின்ற ஜூலை 26 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் படத்தின் அடுத்தடுத்த பாடல்களும் வெளியான நிலையில் பிரமாண்டமான இசை வெளியீட்டு விழாவும் நடைபெற்று முடிந்துள்ளது. தனுஷ் நடிப்பில் உருவாகும் 'ராயன்' ....ட்ரைலர் குறித்த அறிவிப்பு!இந்நிலையில் ராயன் படத்தின் டிரைலர் வருகின்ற ஜூலை 16 (நாளை) வெளியாகும் என படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே வெளியான தகவலின் படி இந்த படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இடம் பெற்று இருக்கும். எனவே ரசிகர்கள் பலரும் ட்ரைலருக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ