Homeசெய்திகள்சினிமாதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் தனுஷ் சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் தனுஷ் சாமி தரிசனம்

-

- Advertisement -
தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாக பெயர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தில் தொடங்கிய தனுஷின் திரைப்பயணம் இன்று வரை வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. தொடக்கத்தில் அவரது உடல் தோற்றத்திற்கும், நிறத்திற்கும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். விமர்சனங்களுக்கு தனது திரைப்படங்கள் வாயிலாகவும், நடிப்பின் வாயிலாகவும் பதில் கொடுத்து வாயை அடைத்தார் நடிகர் தனுஷ்.

தமிழில் கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த தனுஷ் தற்போது தமிழ் திரையை தாண்டி பிற மொழிப்படங்களிலும் நடிக்க ஆர்வம் செலுத்தி வருகிறார். தொடக்கத்தில் இந்தியில் சோனம் கபூருடன் இணைந்து ராஞ்சனா என்ற படத்தில் நடித்தார். இத்திரைப்படம் இந்தியில் மட்டுமில்லாமல், தமிழிலும் ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து சாரா அலிகானுடன் சேர்ந்து மீண்டும் இந்தியில், ஆஹா கல்யாணம் படத்தில் நடித்தார். இத்திரைப்படம் ஹிட் அடித்தது. தற்போது இயக்குநர் ஆனந்த் எல்.ராயுடன் இணைந்து மூன்றாவது படத்தில் நடித்து வருகிறார்.

இது தவிர, தெலுங்கில் சேகர் கம்முலா படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜூனா ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு திருப்பதியில் நடைபெற்றது. இந்நிலையில், நடிகர் தனுஷ் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவரைக் கண்ட ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு அவருடன் புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டினர்.

MUST READ