Homeசெய்திகள்சினிமாஹெய்ஸ்ட் திரில்லரில் நடிக்கும் தனுஷ் .... இயக்குனர் யார்?

ஹெய்ஸ்ட் திரில்லரில் நடிக்கும் தனுஷ் …. இயக்குனர் யார்?

-

- Advertisement -

நடிகர் தனுஷ், ஹெய்ஸ்ட் திரில்லர் கதைக்களத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.ஹெய்ஸ்ட் திரில்லரில் நடிக்கும் தனுஷ் .... இயக்குனர் யார்?

தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ‘ராயன்’ எனும் திரைப்படம் வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து நடிகர் தனுஷ் ‘குபேரா’, ‘இட்லி கடை’ ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அதில் இட்லி கடை திரைப்படம் 2025 ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருக்கிறது. குபேரா திரைப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஹெய்ஸ்ட் திரில்லரில் நடிக்கும் தனுஷ் .... இயக்குனர் யார்? மேலும் நடிகர் தனுஷ், மீண்டும் பாலிவுட்டிற்கு சென்று ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் உருவாகும் ‘தேரே இஷ்க் மெய்ன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் தொடங்கப்பட்ட விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இவ்வாறு ஓய்வே இல்லாமல் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வரும் தனுஷ் சில வருடங்களுக்கு முன்பாக ஹெச். வினோத் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியானது. அதே சமயம் ஹெச். வினோத் தற்போது விஜயின் ஜனநாயகன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதன் பின்னர் தனுஷை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹெய்ஸ்ட் திரில்லரில் நடிக்கும் தனுஷ் .... இயக்குனர் யார்?அதன்படி தனுஷ், ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தினை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கப் போகிறது எனவும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க போகிறார் எனவும் சொல்லப்படுகிறது. அடுத்தது இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த படமானது ஹெய்ஸ்ட் திரில்லர் கதைக்களத்தில் உருவாகப் போவதாகவும் புதிய தகவல் வெளிவந்துள்ளது. இருப்பினும் இனிவரும் நாட்களில் வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ