நடிப்பு, இயக்கம், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமையோடு வலம் வரும் டாப் நடிகர் தான் தனுஷ். இவர் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு ரிலீஸாக உள்ளது. நடிப்பு மட்டுமின்றி அவ்வப்போது படங்களை இயக்கியும் வருகிறார். இந்நிலையில் இவர் இயக்கத்தில் முதல் படமாக வெளியான ப. பாண்டி மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. இப்படத்தில் ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பின்னர் தனுஷின் இயக்கத்தில் இரண்டாவது படமாக தன்னுடைய ( D50 ) ஐம்பதாவது படத்தையே உருவாக்கி வருகிறார் தனுஷ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இதற்கான அறிவிப்பு போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி ட்ரென்ட் ஆனது. படத்தின் தலைப்பு ராயன் என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனுஷ் இயக்கத்தில் மூன்றாவது படம் இயக்க இருப்பதாக ஏற்கனவே சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தது. அதன்படி தனுஷ் தான் இயக்க இருக்கும் புதிய படத்தில் தன்னுடைய அக்கா மகனையே ஹீரோவாக நடிக்க வைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இப்படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த வாரம் அதாவது டிசம்பர் 12 அன்று தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
நேற்று சன் தொலைக்காட்சி அலுவலகத்தில் இப்படத்தின் பூஜை நடத்தப்பட்டதாம். இதனால் இப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்குமா என்ற கேள்வியும் உள்ளது. மேலும் இப்படத்தில் தனுஷும் கேமியோ ரோலில் நடிக்க உள்ளாராம். சில நிமிடங்கள் மட்டுமே வந்து போவது மட்டுமாக இல்லாமல் தனுஷின் காட்சிகள் சற்று அதிக நேரம் இருக்கும் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் தான் இசையமைக்கவுள்ளார். இதனால் இயக்குனர் அவதாரம் எடுத்த தனுஷின் அடுத்தடுத்த திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்த உள்ளன.
- Advertisement -