தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ராயன் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். தனுஷின் 50வது படமான இந்த படத்தை தனுஷே இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார். படத்தில் தனுஷ் உடன் இணைந்து சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், எஸ் ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் கதைக்களத்தில் கிட்டத்தட்ட 100 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த படம் இன்று ஜூலை 26) உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ள இந்த படம் தொடர்பான விமர்சனங்களை ரசிகர்கள் பலரும் ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.
ராயன் படத்தின் முதல் பாதியில் சில நிமிடங்கள் கதாபாத்திரங்கள் குறித்து விவரிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து கதை மெதுவாக நகர இந்த படமானது வழக்கமான பழிவாங்கும் கதையாக இருந்தாலும் தனுஷ் ஒரு இயக்குனராக தனது சிறந்ததை கொடுத்து இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. படத்தில் இடைவேளை பகுதி ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ் கொடுப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளார்கள். அதே சமயம் தனுஷுக்கு நிகரான கதாபாத்திரம் நடிகர் சந்தீப் கிஷனுக்கும் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அதேசமயம் முதல் பாதையில் எஸ் ஜே சூர்யாவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் ஏ ஆர் ரகுமானின் இசை படத்தில் நன்றாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது. அதாவது ஏ ஆர் ரகுமான் தான் படத்தின் இரண்டாவது ஹீரோவாக தனது இசையின் மூலம் படத்தை தாங்கிப் பிடித்துள்ளார் என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அடுத்ததாக படத்தின் இரண்டாம் பாதியில் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.