Homeசெய்திகள்சினிமாதனுஷின் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட தடை

தனுஷின் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட தடை

-

தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளத்தில் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தனுஷ் மற்றும் பிரியங்கா அருள் மோகன் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து உள்ளது. இத்திரைப்படம் பொங்கல் பண்டிகை விருந்தாக வரும் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சந்திப் கிஷன், ஜான் கொக்கேன், நிவேதிதா சதீஷ், சிவராஜ் குமார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். பீரியட் டிராமாவாக இத்திரைப்படம் உருவாகி இருக்கிறது. 1940 மற்றும் 1990 களில் கதை நடப்பது போல படத்தின்கதைக்களம் அமைக்கப்பட்டு உள்ளது. இது தனுஷின் திரைப்பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திலிருந்து ஏற்கனவே மூன்று பாடல்கள் மற்றும் முன்னோட்டம் இணையத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றன.
இந்நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளத்தில் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

MUST READ