Homeசெய்திகள்சினிமாதனுஷின் D50.... ரிலீஸ் எப்போது தெரியுமா?

தனுஷின் D50…. ரிலீஸ் எப்போது தெரியுமா?

-

- Advertisement -

தனுஷின் D50.... ரிலீஸ் எப்போது தெரியுமா?அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்தை முடித்துவிட்டு தனுஷ் தனது ஐம்பதாவது திரைப்படத்தை தானே இயக்கி நடித்தார். இந்தப் படத்தில் தனுஷ் உடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், பாலமுரளி, சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், அனிகா சுரேந்திரன், செல்வ ராகவன் என ஒரு நட்சத்திர பட்டாளத்தையே நடிக்க வைத்துள்ளார் தனுஷ். இதன் படப்பிடிப்புகள் சில மாதங்களுக்கு முன்பாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் முடிவடைந்ததாக தனுஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்திருந்தார். மாஸ் கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது. எனவே இந்த படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தனுஷின் D50.... ரிலீஸ் எப்போது தெரியுமா?

இந்நிலையில் தனுஷின் D50 படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி 2024 ஏப்ரல் மாதத்தில் 11 அல்லது 12 ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ரிலீஸ் செய்ய தனுஷ் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இருப்பினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ் D50 படத்தை தொடர்ந்து தனது அக்கா மகனை ஹீரோவாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ