Homeசெய்திகள்சினிமாஉண்மை கதையில் உருவாகும் தனுஷின் 'D55'!

உண்மை கதையில் உருவாகும் தனுஷின் ‘D55’!

-

- Advertisement -

தனுஷின் D55 திரைப்படம் உண்மை கதையில் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.உண்மை கதையில் உருவாகும் தனுஷின் 'D55'!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு ராயன் திரைப்படம் வெளியானது. அதை தொடர்ந்து இவர் குபேரா, இட்லி கடை ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அதில் இட்லி கடை திரைப்படம் 2025 ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி திரைக்கு வர தயாராக வருகிறது. அடுத்தது நடிகர் தனுஷ், ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தேரே இஷ்க் மெய்ன் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். இந்த படம் 2025 நவம்பர் மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு நடிகர் தனுஷ் தனது அடுத்த அடுத்த படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் நடிகர் தனுஷ் தனது 55வது திரைப்படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். அதன்படி தற்காலிகமாக D55 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை அமரன் படத்தில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.உண்மை கதையில் உருவாகும் தனுஷின் 'D55'! இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. அது மட்டுமில்லாமல் இந்த படத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் எனவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி படமானது உண்மை கதையை மையமாக வைத்து கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ஜானரில் உருவாக உள்ளதாக லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ