Homeசெய்திகள்சினிமாரிலீஸுக்கு முன்பே சம்பவம் செய்யும் தனுஷ்.... 150 மில்லியன் பார்வைகளை கடந்த 'கோல்டன் ஸ்பேரோ' பாடல்!

ரிலீஸுக்கு முன்பே சம்பவம் செய்யும் தனுஷ்…. 150 மில்லியன் பார்வைகளை கடந்த ‘கோல்டன் ஸ்பேரோ’ பாடல்!

-

- Advertisement -

கோல்டன் ஸ்பேரோ பாடல் 150 மில்லியன் பார்வைகளை கடந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ரிலீஸுக்கு முன்பே சம்பவம் செய்யும் தனுஷ்.... 150 மில்லியன் பார்வைகளை கடந்த 'கோல்டன் ஸ்பேரோ' பாடல்!

நடிகர் தனுஷின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இந்த படத்தில் பவிஷ் கதாநாயகனாக நடிக்க அனிதா சுரேந்திரன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் இணைந்து பிரியா வாரியர், மேத்யூ தாமஸ், ரம்யா ரங்கநாதன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை உண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். லியோன் பிரிட்டோ இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். ரிலீஸுக்கு முன்பே சம்பவம் செய்யும் தனுஷ்.... 150 மில்லியன் பார்வைகளை கடந்த 'கோல்டன் ஸ்பேரோ' பாடல்!ரொமான்டிக் காதல் கலந்த கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற பிப்ரவரி 21 திரைக்கு வர தயாராகி வருகிறது. அதற்கான முழு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் பாடல்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ரிலீஸுக்கு முன்பே சம்பவம் செய்யும் தனுஷ்.... 150 மில்லியன் பார்வைகளை கடந்த 'கோல்டன் ஸ்பேரோ' பாடல்!அதிலும் குறிப்பாக பிரியங்கா அருள் மோகன் கேமியோ ரோலில் நடித்திருந்த ‘கோல்டன் ஸ்பேரோ’ பாடல் வெளியான நாள் முதலில் இருந்தே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஆட்டம் போட வைத்திருக்கிறது. அந்த வகையில் இந்த பாடல் தற்போது வரை 150 மில்லியன் பார்வைகளை கடந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவு இந்த பாடல்வரிகளை எழுத தனுஷ், சுப்லாசினி, ஜிவி பிரகாஷ், அறிவு ஆகியோர் இணைந்து இந்த பாடலை பாடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ