இட்லி கடை படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நாளை மதுரையில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
நடிகர் தனுஷ் கடைசியாக ராயன் திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் அதை தொடர்ந்து குபேரா போன்ற படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். நடிப்பது ஒரு பக்கம் இருந்தாலும் படம் இயக்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். அதன்படி ஏற்கனவே இவரது இயக்கத்தில் உருவாகி இருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. இதற்கிடையில் இட்லி கடை எனும் திரைப்படத்தையும் தானே இயக்கி நடித்து வருகிறார் தனுஷ். இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து நித்யா மேனன், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண், அருண் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். கிரண் கௌசிக் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு தேனி, பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி நாளை (நவம்பர் 15) இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு மதுரையில் தொடங்க இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இட்லி கடை படமானது அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.