நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு ராயன் திரைப்படத்தில் நடித்திருந்தார். தனுஷின் ஐம்பதாவது படமான இந்த படத்தை அவரே இயக்கியும் இருந்தார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலாநிதிமாறன் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் படத்திற்கு இசையமைத்திருந்தார். ஓம் பிரகாஷ் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படமானது கடந்த ஜூலை 26 அன்று தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி இருந்த இந்த படம் வெளியான முதல் நாளில் இருந்தே பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதன்படி ஐந்து நாட்களிலேயே இந்த படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது என சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. அதைத் தொடர்ந்து தற்போது ராயன் திரைப்படமானது 130 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. மேலும் பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்று வரும் இப்படமானது இன்னும் சில நாட்களில் 200 கோடியை நெருங்கி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் படக்குழுவினர் சார்பில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
- Advertisement -