நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர். இவர் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பாடல் ஆசிரியராகவும் பாடகராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. மேலும் தனுஷ் குபேரா, இளையராஜாவின் பயோபிக் போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அதேசமயம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் எனும் திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். இதற்கிடையில் நடிகர் தனுஷ் தனது 50வது திரைப்படமான ராயன் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து முடித்துள்ளார். இதில் தனுஷ், எஸ் ஜே சூர்யா, செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம் சரவணன், சந்தீப் கிஷன், வரலட்சுமி சரத்குமார், அபர்ணா பால முரளி, துஷாரா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டிலேயே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்ற முடிந்தது. இதில் நடிகர் தனுஷ் மொட்டை தல கெட்டப்பில் நடித்துள்ளார். படமானது மாஸான கேங்ஸ்டர் படமாக தயாராகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக மே மாத இறுதியில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் ஜூன் மாதத்தில் கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால் ராயன் திரைப்படம் 2024 ஜூலை மாதத்தில் வெளியாகும் என்று புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.