Homeசெய்திகள்சினிமாஅஜித்தின் தீனா ரீ ரிலீஸ்... திரையரங்கிற்குள் பட்டாசு வெடித்து அமர்க்களம்...

அஜித்தின் தீனா ரீ ரிலீஸ்… திரையரங்கிற்குள் பட்டாசு வெடித்து அமர்க்களம்…

-

- Advertisement -
நடிகர் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று தீனா திரைப்படம் மறுவெளியீடு ஆன நிலையில், திரையரங்குகளில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

2000-களில் அஜித் நடிப்பில் வெளியான பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதோடு மட்டுமன்றி, தமிழ் சினிமாவில் ஆழமான தாக்கத்தையும் ஏற்படுத்தின. பல படங்கள் இன்று வரை தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்றாக மாறி இருக்கின்றன. அந்த வகையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2001-ம் வெளியாகி அதிரிபுதிரி ஹிட் அடித்த திரைப்படம் தீனா. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக லைலா நடித்திருந்தார். சுரேஷ் கோபி, உள்ளிட்டோர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

தீனா திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் தான் அஜித் தல என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டார். தீனா திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றதோடு மட்டுமன்றி, படத்தில் அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தன. இத்திரைப்படம் கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் கழித்து மீண்டும் திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது டிஜிட்டல் முறையில் திரைப்படம் ரி ரிலீஸ் ஆகியிருக்கிறது.

இன்று அஜித்குமாரின் பிறந்தநாள் விழாவை கொண்டாடும் விதமாக அஜித் நடிப்பில் ஹிட் அடித்த பல படங்கள் இன்று மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, தீனாவும் ரீ ரிலீஸ் ஆகியிருக்கிறது. தீனா படத்தை பார்க்க ரோகிணி திரையரங்கம் சென்ற ரசிகர்கள், திரையரங்கிற்குள் பட்டாசு வெடித்து அமர்க்களம் செய்தனர். வத்திக்குச்சி பத்திக்காதுடா என்ற பாடல் ஒளிபரப்பானபோது, வைப் ஆன ரசிகர்கள் இருக்கையில் இழுந்து நடனமாடத் தொடங்கியதுடன், பட்டாசுகளையும் வெடித்தனர். இதனால், தியேட்டரில் தீப்பொறி புகை மூட்டம் சூழந்தது.

MUST READ