நடிகர் மோகன்லால் அடுத்தடுத்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் மோகன்லால் நேரு எனும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. சதீஷ் குரூப் ஒளிப்பதிவு செய்ய விஷ்ணு சியாம் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் மோகன்லால் உடன் இணைந்து பிரியாமணி, அனஸ்வரா ராஜன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நீதி சம்பந்தமான கதை களத்தில் கடந்த டிசம்பர் 21ஆம் தேதி வெளியான இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. த்ரிஷ்யம் படத்திற்குப் பின் இணைந்த மோகன்லால் , ஜீத்து ஜோசப் கூட்டணியில் வெளியான படம் ரசிகர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 6 கோடி வசூலித்த நிலையில் தற்போது 10 நாட்களில் 50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் 2024 ஜனவரி 25ஆம் தேதி வெளியாக இருக்கிறது. வ்ருஷபா மற்றும் எம்புரான் போன்ற படங்களும் மோகன்லால் நடிப்பில் உருவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.