Homeசெய்திகள்சினிமாதுருவ் விக்ரம், பா ரஞ்சித், மாரி செல்வராஜ், கூட்டணியில் உருவாகும் புதிய படம்.... உறுதி செய்த...

துருவ் விக்ரம், பா ரஞ்சித், மாரி செல்வராஜ், கூட்டணியில் உருவாகும் புதிய படம்…. உறுதி செய்த படக்குழு!

-

- Advertisement -

இயக்குனர் மாரி செல்வராஜ், பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமானவர். அதை தொடர்ந்து இவர் வாழை எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். சமீப காலமாக மாரி செல்வராஜ், நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக செய்திகள் பரவி வந்தது. அதன்படி இவர்களின் கூட்டணியில் உருவாகும் இந்த புதிய படத்தை பா. ரஞ்சித் தனது நீளம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

தற்போது இது சம்பந்தமான அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி, நேற்று தனது 26வது பிறந்த நாளை கொண்டாடிய துருவ் விக்ரமிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் மாறி செல்வராஜ் மற்றும் பா ரஞ்சித் இருவரும் தனது ட்விட்டர் பக்கத்தில் துருவ் விக்ரம் மற்றும் மாரி செல்வராஜ் இருக்கும் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
மேலும் இந்த படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு பிரபல கபடி வீரர் மனதில் பி கணேஷ் அவர்களின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

MUST READ