நடிகர் துருவ் விக்ரம் தமிழ் சினிமாவில் ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக காலடி எடுத்து வைத்தவர்.அதைத்தொடர்ந்து இவர் விக்ரமுடன் இணைந்து மகான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதன் பின்னர் தற்போது பைசன் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் துருவ் விக்ரம். இந்த படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். இதனை பா ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனமும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. நிவாஸ் கே பிரசன்னா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இதில் துருவ் விக்ரமுடன் இணைந்து அனுபமா பரமேஸ்வரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கடந்த மே மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டு சென்னை, நெல்லை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பட குழுவினர் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் தற்போது வரை 70% படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரசிகர்கள் பலரும் இந்த படத்தின் படப்பிடிப்பை இப்போதுதான் தொடங்கப்பட்டது போல் இருக்கிறது. ஆனால் அதற்குள் பாதிக்கு மேல் படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.