ஆதித்யா வர்மா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் துருவ் விக்ரம். இவர் நடிகர் விக்ரமின் மகன் என்பது அனைவரும் அறிந்ததே. துருவ் விக்ரம் நடித்த ஆதித்யா வர்மா திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியை பெறவில்லை என்றாலும் இவரின் நடிப்பு இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதை தொடர்ந்து விக்ரமுடன் இணைந்து மகான் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது துருவ் விக்ரமுக்கு தொடர்ந்து பல பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அதன்படி டாடா பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. பின்னர் பெங்களூர் டேஸ் படத்தின் இயக்குனர் அஞ்சலி மேனன் இயக்கத்திலும் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கம்மிட் ஆகியுள்ளாராம் துருவ் விக்ரம். இதற்கிடையில் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனது மூன்றாவது படத்தில் நடிக்க இருக்கிறார் துருவ் விக்ரம். இது சம்பந்தமான அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் படப்பிடிப்பு சம்பந்தமான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. மேலும் இந்த படம் பிரபல கபடி வீரர் மனத்தை பி கணேஷ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட உள்ளது. இந்நிலையில் இன்று இந்த படத்தில் அனுபவமா பரமேஸ்வரன் இணைந்துள்ளதாக பட குழுவினர் அறிவித்துள்ளனர். அதேசமயம் இந்த படத்தை பா ரஞ்சித்தின் நீலம் ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனமும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இவ்வாறு இந்த படம் சம்பந்தமான அப்டேட்டுகள் தொடர்ந்து வெளிவந்த போதிலும் படப்பிடிப்பு சம்பந்தமான எந்தவித அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் சில தினங்களுக்கு முன்பாக இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற மார்ச் 15ஆம் தேதி தொடங்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது கிடைத்த தகவலின் படி, இதன் ப்ரீ ப்ரோடக்ஷன் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் ஏப்ரல் முதல் வாரத்திற்கு படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாம். எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.