விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
விக்ரம், கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். ஒன்றாக என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். இதில் விக்ரமுடன் இணைந்து ராதிகா சரத்குமார்,ரித்து வர்மா, சிம்ரன், விநாயகன், திவ்யதர்ஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் சில ஆண்டுகளுக்கு முன்பாகவே படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு நீண்ட நாள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் துருவ நட்சத்திரம் படத்தினை தீபாவளியை முன்னிட்டு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இது சம்பந்தமான அறிவிப்பு நாளை வெளியாகும் என்று கூறப்படுகிறது.
விக்ரம், பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.