துருவ் விக்ரமிற்கு கோல்டன் விசா… ஐக்கிய அரபு அமீரகம் கௌரவிப்பு…
- Advertisement -

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகர்களில் ஒருரர் துருவ் விக்ரம். விக்ரமின் மகனும், நடிகரும் ஆவார். அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீமேக் ‘ஆதித்ய வர்மா’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அப்பா உடன் மகான் படத்தில் நடித்தார். இத்திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து நடிகர் துருவ் விக்ரம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் கபடி போட்டியை மையப்படுத்தி உருவாகிறது. இத்திரைப்படத்திற்காக நடிகர் துருவ் விக்ரம் முழு நேர கபடி பயிற்சியில் இறங்கியிருக்கிறார். படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே டாடா பட இயக்குநர் கணேஷ் பாபுவுடன் துருவ் விக்ரம் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் துருவ் விக்ரமிற்கு ஐக்கிய அரசு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது. தனது நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த வெளிநாடுகளை, சேர்ந்த நடிகர்கள், தொழில் அதிபர்கள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோருக்கு நீண்ட கால குடியுரிமைமை வழங்கும் நோக்கில் ஐக்கிய அரசு அமீரகம் கோல்டன் விசா வழங்கி வருகிறது. இதற்கு முன் நடிகர் விக்ரமுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.