Homeசெய்திகள்சினிமாவிக்ரமை தொடர்ந்து அதிரடி ஹீரோவுடன் ஜோடி சேரும் துஷாரா!

விக்ரமை தொடர்ந்து அதிரடி ஹீரோவுடன் ஜோடி சேரும் துஷாரா!

-

- Advertisement -

நடிகை துஷாரா விஜயன், அதிரடி ஹீரோவுடன் ஜோடி சேர உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.விக்ரமை தொடர்ந்து அதிரடி ஹீரோவுடன் ஜோடி சேரும் துஷாரா!

நடிகை துஷாரா விஜயன் கடந்த 2021 இல் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதைத் தொடர்ந்து இவர் கழுவேத்தி மூர்க்கன், அநீதி ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். அடுத்தது இவர் ராயன், வேட்டையன் ஆகிய படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெற்றார். மேலும் இவர், சமீபத்தில் திரைக்கு வந்த வீர தீர சூரன் பாகம் 2 திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்திலும் இவருடைய நடிப்பு பெரிய அளவில் பேசப்படுகிறது. விக்ரமை தொடர்ந்து அதிரடி ஹீரோவுடன் ஜோடி சேரும் துஷாரா!இவ்வாறு தமிழ் சினிமாவில் குறுகிய நாட்களிலேயே தனக்கென தனி ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டுள்ளார் துஷாரா. இந்நிலையில் இவர் பிரபல நடிகர் விஷாலுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கப் போகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

அதாவது விஷால் நடிப்பில் கடைசியாக மதகஜராஜா திரைப்படம் வெளியானது. இதன் பின்னர் விஷால் துப்பறிவாளன் 2, இரும்புத்திரை 2, மார்க் ஆண்டனி 2 ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். மேலும் கௌதம் மேனன் இயக்கத்திலும் புதிய படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார் விஷால். விக்ரமை தொடர்ந்து அதிரடி ஹீரோவுடன் ஜோடி சேரும் துஷாரா!இதற்கிடையில் இவர் ஈட்டி பட இயக்குனர் ரவி அரசு இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போகிறார் என சமீபத்தில் பல தகவல்கள் வெளியானது. அதன்படி இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக துஷாரா நடிக்கிறாராம். இந்த படத்தினை விஷால் தயாரிக்க உள்ளதாகவும் இப்படத்தின் படப்பிடிப்பு 2025 ஏப்ரல் மாதம் தொடங்க இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ