Homeசெய்திகள்சினிமாசமூக வலைதளங்களிலிருந்து வெளியேறிய அல்போன்ஸ் புத்திரன்!

சமூக வலைதளங்களிலிருந்து வெளியேறிய அல்போன்ஸ் புத்திரன்!

-

- Advertisement -
மலையாளத்தில் வெளியாகி பான் இந்தியா அளவில் ஹிட் அடித்த திரைப்படம் ‘பிரேமம்’. இப்படம் மலையாளத்தில் வெற்றி பெற்றதை அடுத்து, தமிழகத்திலும் படத்தை வெளியிட்டனர். இப்படத்தை இயக்கி இருந்தவர் அல்போன்ஸ் புத்ரன். இன்று மலையாள சினிமா விரும்பிகள் என்று மார் தட்டிக் கொள்ளும் பலரை மலையாளப் படங்களை நோக்கி படையெடுக்க செய்த பெருமை பிரேமம் படத்தையே சேரும். இப்படத்தில் நிவின் பாலி, சாய்பல்லவி, மடோனா ஆகியோர் நடித்திருப்பர்.

எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாத கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்கள் தான் படத்தின் கூடுதல் பலம். மேலும் படத்தின் உருவாக்கம் டெம்பிளேட்களை உடைத்தெறிந்து எளிமையான காட்சிகள் மூலம் பார்வையாளர்களின் இதயத்தின் ஊடாக பாய்ந்தது. பிரேமம் படத்தை தொடர்ந்து பிரித்விராஜ் மற்றும் நயன்தாரா நடிப்பில் கோல்டு படத்தை அல்போன்ஸ் இயக்கியிருந்தார். ஆனால் இந்தப் படம் சற்று ஏமாற்றம் அளித்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படம் வெளியானது. இதையடுத்து தமிழ் நடிகரும், நடன இயக்குநருமான சாண்டி மாஸ்டரை வைத்து கிஃப்ட் படத்தை இயக்குவதாக அறிவித்தார். ஆனால் படம் தொடர்பான எந்த அறிவிப்பும் வௌியாக வில்லை.

இந்நிலையில், படம் இயக்குவதிலிருந்து வெளியேறுவதாகவும், இனிமேல் படம் இயக்கப்போவதில்லை என்றும் அல்போன்ஸ் புத்ரன் தெரிவித்திருந்தார். தற்போது, இன்ஸ்டா, பேஸ்புக், என அனைத்து சமூக வலைதளங்களில் இருந்தும் வெளியேறுவதாக தெரிவித்துள்ளார். நான் சமூக வலைதளங்களில் பதிவிடுவது யாருக்கும் பிடிக்கவில்லை என்றும் அவர் பதிவிட்டுள்ளார். நான் அமைதியாக இருந்தால் எல்லாரும் நிம்மதியாகஇருப்பார்கள், என தெரிவித்தார்.

MUST READ