Homeசெய்திகள்சினிமாசட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுடன் பணியாற்ற மாட்டேன்.....ஜாபர் சாதிக் விவகாரத்தில் அதிரடி காட்டும் அமீர்!

சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுடன் பணியாற்ற மாட்டேன்…..ஜாபர் சாதிக் விவகாரத்தில் அதிரடி காட்டும் அமீர்!

-

பிரபல இயக்குனரான அமீர், மௌனம் பேசியதே, பருத்திவீரன் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர். அதை தொடர்ந்து நடிப்பிலும் ஆர்வம் உடைய இவர் யோகி, யுத்தம் செய் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் மாயவலை என்ற படத்திலும் நடித்து வருகிறார். அதே சமயம் இறைவன் மிகப் பெரியவன் என்ற படத்தையும் இயக்கி வருகிறார். சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுடன் பணியாற்ற மாட்டேன்.....ஜாபர் சாதிக் விவகாரத்தில் அதிரடி காட்டும் அமீர்!இந்நிலையில் இறைவன் மிகப் பெரியவன் படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் ஐ போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு தேடி வருவதாக பல தகவல்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

இந்நிலையில் இது குறித்து இயக்குனர் அமீர், “என்னுடைய இறைவன் மிகப் பெரியவன் படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் குறித்து வெளிவரும் தகவல்கள் அனைத்தும் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கடந்த 22 ஆம் தேதி நான் இறைவன் மிகப் பெரியவன் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் இருந்தேன். அப்போது திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. எதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுடன் பணியாற்ற மாட்டேன்.....ஜாபர் சாதிக் விவகாரத்தில் அதிரடி காட்டும் அமீர்!ஊடகங்கள் மூலமாக தான் இப்போது அதனை அறிந்து கொண்டேன். உண்மை எதுவென்று எனக்கு தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் வெளிவரும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமேயானால் அது கண்டிக்கப்பட வேண்டியது. தண்டிக்கப்பட வேண்டியது. தயாரிப்பாளர்களோடும் நடிகர்களோடும் சமரசமாக இருந்தால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற கொள்கைக்கு நான் எப்போதும் எதிரானவன் தான். அதன்படி சட்ட விரோத செயல்களில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்களுடன் நான் பணியாற்ற மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ