Homeசெய்திகள்சினிமாசேரன் மகளுக்கு கோலாகல திருமணம்... திரைப்பிரபலங்கள் வாழ்த்து...

சேரன் மகளுக்கு கோலாகல திருமணம்… திரைப்பிரபலங்கள் வாழ்த்து…

-

அப்பா பாசம், காதல், நட்பு என அனைத்து கோணத்திலும் மிகச்சிறந்த திரைப்படங்களை தமிழ் ரசிகர்களுக்கு வழங்கி சிறப்பு நடிகரும், இயக்குநருமான சேரனுக்கு உண்டு. தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் இவரும் ஒருவர். ஒரு திரைக்கதையை காவியமாக மாற்றி திரைக்கு கொண்டு வரும் அற்புத இயக்குநர் சேரன். கே.எஸ் ரவிக்குமாரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த சேரன், பாரதி கண்ணம்மா படத்தின் மூலம் திரைத்துறைக்கு இயக்குநராகவும், எழுத்தாளராகவும் அறிமுகம் ஆகினார். இதைத் தொடர்ந்து பொற்காலம், ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

கடந்த 2019-ல் வெளியான திருமணம் என்ற திரைப்படத்தை இவர் கடைசியாக இயக்கி இருந்தார். பிக் பாஸ் சீசன் 3யிலும் பங்கேற்றார். சமீபத்தில் இவர் நடிப்பில் தமிழ் குடிமகன் திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது கலையரசன், பிரசன்னா, ஆரி, திவ்யா ஆகியோரை வைத்து ஜர்னி என்ற தொடரை இயக்கி உள்ளார்.

இந்நிலையில், இயக்குநர் சேரனின் மூத்த மகளான நிவேதா பிரியதர்ஷனிக்கும் – சுரேஷ் ஆதித்யா என்ற தொழில் அதிபருக்கும் சென்னையில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்று முடிந்தது. இதில், ஏராளமான பிரபலங்களும், துணை பிரபலங்களும், முன்னனி இயக்குநர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திச் சென்றனர்.

MUST READ