Homeசெய்திகள்சினிமாசூரிக்காகவே கதை எழுதிய வெற்றிமாறன்... உண்மைச் சம்பவங்களை தழுவி கருடன்...

சூரிக்காகவே கதை எழுதிய வெற்றிமாறன்… உண்மைச் சம்பவங்களை தழுவி கருடன்…

-

சூரி, சசிகுமார் ஆகியோர் நடிப்பில் கருடன் திரைப்படம் உருவாகி வரும் நிலையில், அக்கதை சூரிக்காகவே எழுதப்பட்டது என இயக்குநர் தெரிவித்துள்ளார்.

கோலிவுட்டில் லட்சக்கணக்கில் திரைப்படங்கள் வெளியாகினும் ஒரு சில படங்களும், ஒரு சில நடிகர்களும், வெகு சில கதாபாத்திரங்களுமே ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடிக்கும். அதில் முக்கியமான ஒன்று பரோட்டா சூரி. அவர் பல படங்களில் நடித்திருந்தாலும் வெண்ணிலா கபடிக்குழு திரைப்படம் மட்டுமே அவரை அடையாளப்படுத்தி காட்டியது. அவருக்கு பரோட்டா சூரி என்ற அடையாளப் பெயரையும் பெற்றுக் கொடுத்தது. இதையடுத்து, அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. சூரியின் திரைப்பயணத்தின் ஆரம்பகாலத்தில் பெரும்பாலும் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அவர் நடித்திருப்பார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், மான் கராத்தே என அவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்த நடித்த படங்கள் ஏராளம்.

நகைச்சுவை வேடங்களில் மட்டுமே நடித்து வந்த சூரி, வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தில் முதல் முறையாக ஹீரோகாவ நடித்திருந்தார். இத்திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து விடுதலை இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொட்டுக்காளி படத்தில் நடித்தார். இதனிடையே, துரை செந்தில் குமார் இயக்கும் புதிய படத்திலும் அவர் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு வெற்றிமாறன் திரைக்கதை எழுதி இருக்கிறார். சூரி, சசிகுமார், மலையாள பிரபலம் உன்னி முகுந்தன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கருடன் என்று தலைப்பு வைத்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசை அமைத்துள்ளார். இந்நிலையில், இப்படம் குறித்து பேசிய இயக்குநர் துரை செந்தில்குமார், கருடன் படத்தின் கதை சூரிக்காகவே எழுதப்பட்டது என்றும், உண்மைச் சம்பவங்களை தழுவி இயக்குநர் வெற்றிமாறன் திரைக்கதை எழுதியுள்ளார் என்றும் தெரிவித்தார்.

MUST READ