நடிகர் தனுஷ் தமிழ் சினிமா நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், பாடல் ஆசிரியராகவும் பாடகராகவும் வலம் வருகிறார். இவர் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து ராயன் திரைப்படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். மேலும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தை இயக்கியும் வருகிறார். அதேசமயம் குபேரா படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். மேலும் பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார். இவ்வாறு பிசியாக நடித்து வரும் தனுஷ், இயக்குனர் இளனுடன் கைக்கோர்க்க உள்ளார். இயக்குனர் இளன் 2018ல் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ப்யார் பிரேமா காதல் படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதைத் தொடர்ந்து கவின் நடிப்பில் ஸ்டார் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் தான் இயக்குனர் இளன், தனுஷ் உடன் கூட்டணி அமைக்கப் போவதை உறுதி செய்துள்ளார்.
அதன்படி அவர் கூறியதாவது, “விரைவில் தனுஷ் சாருடன் என்னுடைய படத்தை எதிர்பார்க்கலாம். அது மதுரை அடிப்படையிலான ஸ்கிரிப்ட் . மேலும் இது தனுஷ் சாருக்கும் எனக்கும் பிடித்த ஸ்கிரிப்ட். இந்த ஸ்கிரிப்ட் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. அந்த படத்தை சரியான தளத்தில் கொண்டு செல்ல நாங்கள் விழிப்புடன் இருக்கிறோம். படமானது மிகப்பெரியது. அதனால் சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -