Homeசெய்திகள்சினிமாகுடும்பத்துடன் பார்க்கும் படம் தான் 'தேசிங்கு ராஜா 2'..... இயக்குனர் எழில்!

குடும்பத்துடன் பார்க்கும் படம் தான் ‘தேசிங்கு ராஜா 2’….. இயக்குனர் எழில்!

-

குடும்பத்துடன் பார்க்கும் படம் தான் 'தேசிங்கு ராஜா 2'..... இயக்குனர் எழில்!விமல் நடிப்பில் இயக்குனர் எழில் இயக்கியிருந்த படம் தேசிங்கு ராஜா. இந்த படம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நீண்ட வருடங்கள் கழித்து இயக்குனர் எழில் தேசிங்கு ராஜா படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகிறார். தேசிங்கு ராஜா 2 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பூஜிதா பொன்னாடா நடிக்கிறார். குடும்பத்துடன் பார்க்கும் படம் தான் 'தேசிங்கு ராஜா 2'..... இயக்குனர் எழில்!மேலும் இவர்களுடன் குக் வித் கோமாளி புகழ், ரவி மரியா, ஹர்ஷிதா மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்தப் படம் இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் வித்யாசாகரின் இசையிலும் தயாராகி வருகிறது. ஆர் செல்வா படத்தில் ஒளிப்பதிவு பணிகளை கவனித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பாக படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. இந்நிலையில் தேசிங்கு ராஜா 2 படத்தின் அப்டேட்டை பகிர்ந்து உள்ளார் இயக்குனர் எழில். குடும்பத்துடன் பார்க்கும் படம் தான் 'தேசிங்கு ராஜா 2'..... இயக்குனர் எழில்!அதன்படி அவர், “தேசிங்கு ராஜா 2 படத்தில் வன்முறை காட்சிகள் எதுவும் இருக்காது. இது குடும்பத்துடன் பார்க்கும் படம் தான். நான் அனைத்தையும் சந்தோஷமாக சொல்ல நினைப்பவன். ஆனால் நிஜமாகவே அதுதான் கஷ்டம். அப்படி கஷ்டப்பட்டு தான் மக்களை சிரிக்க வைக்க தேசிங்கு ராஜா 2 படத்தை உருவாக்கியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ